குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷி!
அப்பா மீடியா தயாரித்துள்ள ‘எங்க அப்பா’ மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18’ம் தேதி வெளியாகிறது!!
இதில் ஐந்து வயது குழந்தை லக்ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹை லைட்.
பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு ‘எங்க அப்பா’ ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியை ‘வருங்கால கதாநாயகி’ என பாராட்டி, வாழ்த்தினார்கள்!
கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு, “எங்க அப்பா” செப்டம்பர் 18’ம் தேதி வருகிறார்!