
எதுவும் அஜித்தைத் தடுக்க முடியாது: போனி கபூர்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பொங்கல் தினத்தையொட்டி அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் பைக் மூலம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருந்தார்.
அப்போது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது. ஒவ்வொரு கனவையும் அவர் நனவாக்கி வருகிறார்.
இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Wow Wow Wow. @BoneyKapoor #ThalaAjith #Valimaiupdate pic.twitter.com/rbzslxt8Xa
— Dhiraj Kumar (@AuthorDhiraj) October 23, 2021