இளம் உள்ளங்களை கவரும் நாயகி தேவியானி ஷர்மா!
தென்னிந்திய திரைத்துறையில் அடுத்தடுத்து முக்கியப் படங்களில் நடிப்பதன் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார், நாயகி தேவியானி சர்மா.
டெல்லியைச் சேர்ந்த தேவியானி சர்மா , தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமானார். படிப்படியாக பல பாத்திரங்களில் தலை காட்டியவர், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் ஆகிய ஹிட் ஷோக்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி சர்மா அடுத்ததாக முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடிக்கவிருக்கிறார்.