Chennai City News

இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள் – அஸ்லம்

இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள் – அஸ்லம்

நேற்று இரவு உயிர் தமிழுக்கு முதல் பிரதி பார்த்தேன் அருமையான மாஸ் கமர்சியல் படம். படம் பக்கா theatre mood-ல் உள்ளது. அமீரின் உடல் மொழி மற்றும் வாய் மொழி இரண்டும் ஒரு பக்கா கம்ப்ளீட் கமர்சியல் ஹீரோவாக முன்னிருத்துகிறது. காதல், சண்டை காட்சிகளிலும் அவர் நடிப்பில் ஒரு மாஸ் இருந்தது அமீர் அண்னனுக்கு இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வை நானறிவேன். அது படத்தில் சிறப்பாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

என்னை அறியாமல் பல காட்சிகளில் சிரித்து ரசிக்க முடிந்தது. ஒவ்வொரு காட்சியிலும் அண்ணனின் நடிப்பு அசால்ட். மதுரை ரகம், வடசென்னை ராஜனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள்.

படம் பிரம்மாண்டமாக ரிச்னஸ்ஸாக இருந்தது இமான் அண்ணாச்சி + அமீர், சத்யராஜ் + கவுண்டமணி கூட்டனியை பல இடங்களில் நினைவுபடுத்துவது ஆரோக்ய காமெடி கமர்ஷியல் கலாட்டா. இவை அனைத்தும் ஒரு கமர்சியல் படஆடியன்ஸுக்கு புல் மீல்ஸ் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். அமீர் அண்ணனுக்கும், இயக்கி தயாரித்த ஆதம் பாவாவுக்கும், வெளியிடும் நண்பர் சுரேஷ் காமாட்சிக்கும் உயிர் தமிழுக்கு முக்கியமான படம். வாழ்துக்கள். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Exit mobile version