ஆரஞ் பிச்சர்ஸ் தயாரித்துள்ள ‘வானரன்’ பட குழுவினருக்கு தீபாவளி பரிசு!

0
234

ஆரஞ் பிச்சர்ஸ் தயாரித்துள்ள ‘வானரன்’ பட குழுவினருக்கு தீபாவளி பரிசு!

ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்து, ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வானரன் .

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக, அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாநடித்துள்ளார்.

இந்நிலையில், கற்பக விருட்சம் Trust மற்றும் ஆரஞ் பிக்சர்ஸ் இணைந்து பகல் வேட கலைஞர்களுக்கும், மேடை கலைஞர்களுக்கும் மற்றும் ‘வானரன்’ பட குழுவினருக்கும் தீபாவளி பரிசு தந்து சிறப்பித்தனர்.

விழாவில் கற்பக விருட்சம் Trust நடத்தி வரும் சத்ய நாராயாணன் சார், ஆரஞ்பிச்சர்ஸ் தயாரிப்பாளர் சுஜாதா ராஜேஷ் , நடிகர் ஆதேஷ் பாலா, நடிகர் அம்பானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு தந்தனர்.

வானரன் பட இடக்குனர் ஸ்ரீராம் பத்மனாபன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை ஸ்ரீதர் தொகுத்து வழங்க சத்யசீலன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்.

ஆரஞ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் பத்மனாபன் வெளி நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வீடியோகாலில் நன்றி கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு: ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன்இ சுஜாதா ராஜேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீராம் பத்மநாபன்
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ் படத்தொகுப்பு: வித்து ஜீவா