Site icon Chennai City News

ஆமதாபாத் விமான விபத்து ; ‘கண்ணப்பா’ பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

ஆமதாபாத் விமான விபத்து ; ‘கண்ணப்பா’ பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

இந்தூரில் இன்று ‘கண்ணப்பா’ பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது.

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இத்திரைப்படம் வரும் 27ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளநிலையில், இந்தூரில் இன்று டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் விமான விபத்து காரணமாக, இந்தூரில் நடைபெறவிருந்த ”கண்ணப்பா” டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஒரு நாள் தாமதமாக அதாவது நாளை படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 241 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

https://x.com/iVishnuManchu/status/1933099599411188148

Exit mobile version