Chennai City News

“அன்பும் ஆசீர்வாதமும் தேவை”- தாய்மை குறித்து நெகிழும் ஸ்ரேயா கோஷல்

“அன்பும் ஆசீர்வாதமும் தேவை”- தாய்மை குறித்து நெகிழும் ஸ்ரேயா கோஷல்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்

https://www.instagram.com/p/CL-57Vzg91h/?utm_source=ig_embed

தமிழில் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version