
திரையரங்கு பிரதிநிதிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் ஆகியோர் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள @RedGiantMovies_-ன் பட பிரதிநிதிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவிடும் வகையில், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கும் நிகழ்வை இன்று சென்னை ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/4fSFaS85q7
— Udhay (@Udhaystalin) June 26, 2021