Chennai City News

3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவன் விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பூவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த செய்ற்கைக்கோள்களில் பூமியில் விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா உள்ளது.

புவியை கண்காணிக்கவுள்ள இந்த செயற்கைக்கோளின் மொத்த 1,170 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மொத்தம் 10 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். அதேபோல், இந்த ஆண்டில் (2022) இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version