Chennai City News

ஸ்விட்ச் இந்தியா அறிமுகப்படுத்தும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மின்சார பேருந்து தளமான ஸ்விட்ச் EiV 12

ஸ்விட்ச் இந்தியா அறிமுகப்படுத்தும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மின்சார  பேருந்து தளமான ஸ்விட்ச் EiV 12

சென்னை 14 ஜூன் 2022:  ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் (‘ஸ்விட்ச்’) எனப்படும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கார்பன் நியூட்ரல் எலக்ட்ரிக் பஸ் மற்றும் இலகுரக வர்த்தக வாகன நிறுவனமானது  இந்திய சந்தையில் அதன் அதிநவீன மின்சார பேருந்து தளமான ‘SWITCH EiV 12’ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை E-பஸ் ஆனது 10 ஆண்டுகளுக்கும் மேலான EV நிபுணத்துவத்தின் ஆதரவுடன், இந்தியாவில் வளர்ந்து வரும் பேருந்துப் பிரிவை அடுத்தக் கட்டத்துக்கு மேபடுத்தும்.  இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதன்படி, EiV 12 லோ ஃப்ளோர் மற்றும் EiV 12 தரநிலை ஆகியவையாகும். இந்த பல்துறை பேருந்துகள் நம்பகத்தன்மை, ரேஞ்ச் மற்றும் பயண சவாரி வசதி ஆகியவற்றில் சிறந்தவை விழங்கும் என்பதில் சந்தேகமில்லை.  இந்நிறுவனம் தற்போது 600 பேருந்துகளின் ஆர்டரை முன்பதிவாகக் கொண்டுள்ளது.

SWITCH EiV 12 ஆனது தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் வசதிக்கான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சலுகைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சமகால மற்றும் எதிர்காலம் சார்ந்ததாக இந்த புதிய அறிமுகம் இருக்கும் என்பது நினைவுக்கூறத்தக்கது. இந்த  EiV 12 ஆனது விதிவிலக்கான டிரைவ் திறன் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. அதோடு, தனியுரிம, இணைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள், ‘ஸ்விட்ச் iON’, ரிமோட், ரியல் டைம் பிரச்னைகளைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் பேட்டரி மேலாண்மைக் கருவிகளுடன் வருகிறது.  EiV இயங்குதளத்தின் EV கட்டமைப்பானது சமீபத்தில் தொடங்கப்பட்ட ஐரோப்பிய ஸ்விட்ச் e1 பஸ் போன்ற வடிவமைப்பாகும்.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட்  நிறுவனத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, “ இந்தியாவில் எங்களின் அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் பஸ் பிளாட்ஃபார்ம் துவங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஸ்விட்ச் மொபிலிட்டிக்கு இந்த தருணமானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.  இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் பல உலகளாவிய சந்தைகளில் எலக்ட்ரிக் தயாரிப்புகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பூஜ்ஜிய கார்பன் மொபிலிட்டி துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். இந்துஜா குழுவின் வலுவான பாரம்பரியம் மற்றும் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் அசோக் லேலண்ட் வணிக வாகன சந்தை ஆகியவற்றின் மூலம்,  மின்சார பேருந்துகள் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் மின்சார இலகுரக வாகனங்கள் ஆகியவற்றை சாதிக்க முடியும். இந்த வளர்ந்து வரும் சந்தையில் முன்னணியில் இருப்பதற்கான எங்கள் பார்வையை விரைவுபடுத்துவோம் என்று நாங்கள் உறுதிகூறுகிறோம்.” என்றார்.

ஸ்விட்ச் மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் CEO & ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் நிறுவன COO-வுமான திருமகேஷ் பாபு இதுகுறித்துப் பேசும்போது, “ உலகளவில் 50 மில்லியன் மின்சார கிமீ  கட்டப்பட்ட ஸ்விட்ச் EiV 12 இயங்குதளத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதற்கு இந்த தளமானது தனித்துவமான, மேம்பட்ட, உலகளாவிய EV கட்டமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த தளத்தில் உள்ள தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்குவதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.  ஸ்விட்ச் iON  இணைக்கப்பட்ட வாகன இயங்குதளமானது, வணிக மதிப்பை மேம்படுத்தும். அதோடு, எங்கள் ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு பல தீர்வுகளை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  எதிர்காலத்தில் ஸ்விட்ச் எலக்ட்ரிக் நுண்ணறிவு, வாகனத் தளத்தின் ஒரு பகுதியாக பல தயாரிப்புகளை வெளிக்கொணர எங்கள் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

Switch EiV அளவிலான பேருந்துகள், அதிகபட்ச பயணிகளுக்கான இட வசதி மற்றும் சொகுசு தன்மையை வழங்கும் வகையில், இன்ட்ரா-சிட்டி, இன்டர்-சிட்டி, ஊழியர்கள், பள்ளி மற்றும் டார்மாக் போன்ற பல்வேறு பயன்பாடுகளின் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமாக கட்டமைக்கப்பட்டுள்ளன.  இந்திய சந்தை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட லித்தியம்-அயன் என்எம்சி கெமிஸ்டியுடன் கூடிய புதிய தலைமுறை உயர் திறன் கொண்ட, மாடுலர் பேட்டரிகளும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன.  மாடுலர் பேட்டரிகள், அதே எடையில் ஒரு பேட்டரி செல்லின் திறனை அதிகரிக்கின்றன. அதனால், அதிக அளவிலான கிலோமீட்டர்களை இயக்குகிறது – ஒரு நாளைக்கு 300 கிமீகள் வரை, மற்றும் டுவல் கன் வேகமாக சார்ஜிங் மூலம் நாள் ஒன்றுக்கு 500 கிமீகள் வரை செல்ல முடியும்.  மின்சார டிரைவ் ட்ரெய்ன்கள் மற்றும் பேட்டரிகள் நீண்ட பேட்டரி ஆயுளுடன் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்காக அளவீடு செய்யப்படுகின்றன, இது சந்தையில் குறைந்த மொத்த உரிமைச் செலவை வழங்குகிறது. இறுதியாக, இந்த அதி நவீன இ-பஸ்ஸின் பராமரிப்பு விரைவாகவும் சிரமமின்றி மேற்கொள்ளப்படும்.

சமீபகாலமாக இந்தியாவில் ஸ்விட்ச் EV பேருந்துகளின் வரம்பில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து 98%க்கும் மேலான இயக்க நேரத்தைக் கொண்டிருப்பது,  எங்களின் செயல்திறனுக்கும், தயாரிப்புத் தரத்திற்கும் சான்று என்றே கூறலாம். பேருந்துகள் இந்தியாவில் 8 மில்லியன் கிமீகளுக்கு மேல் பயணித்து, 5000 டன்களுக்கு மேல் CO2 சேமிக்கிறது, இது 30,000 மரங்களுக்கு மேல் நடுவதற்கு சமமானதாகும், இதனால் பிராண்டின் பணிக்கு ஆதரவாக முக்கிய மூலோபாய மைல்கற்களை வழங்குகிறது: பசுமையான இயக்கம் மூலம் வாழ்க்கையை வளப்படுத்தவும், அனைவருக்கும் அணுகக்கூடிய தூய்மையான, சிறந்த பயணங்களை வழங்கவும் இது கைகொடுக்கும். ஸ்விட்ச் இந்தியா நிறுவனமானது 450 பணியாளர்களைக் கொண்ட அர்ப்பணிப்புக் குழுவைக் கொண்டுள்ளது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதவளத்தை மேலும் அதிகரிக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version