Chennai City News

மாளிகைமேடு இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாளிகைமேடு இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாளிகைமேடு கிராமத்தில் இரண்டாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

Exit mobile version