‘தேசத்துடனும் பாதுகாப்புப் படைகளுடனும் இணைந்து நிற்பீர்!’
14 லட்சம் உறுப்பினர்கள், மாணவர்களுக்கு ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அறைகூவல்!
இந்திய பட்டயக் கணக்காயர் கல்வி நிறுவனம், அண்மையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரப் பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்திய அரசும் நமது ராணுவமும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பட்டயக்கணக்காயர் சட்டம்-1949ன்படி நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய கணக்காளர் அமைப்பு ஆகும். பட்டயக் கணக்காயர் தொழிலை (சி.ஏ) முறைப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இதன் பணிகளாகும்.
இந்தியாவில் 5 மண்டல கவுன்சில்கள், 177 கிளைகளுடன் 14 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டு பட்டயக்கணக்காயர் கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. இதுதவிர, 47 நாடுகளில் 52 அயலகக் கிளைகளிலும் 33 பிரதிநிதித்துவ அலுவலகங்கள் வாயிலாக 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஐ சி ஏ ஐ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிடத்தக்க பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தற்போதைய பதற்றமான சூழலில் தேசிய ஒருமைப்பாட்டுக்காக இவ்வமைப்பு முன் நிற்பதுடன் தேசத்துக்கும் இந்திய மக்களுக்கும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.சி.ஏ.ஐ அமைப்பு, இந்தியாவில் 17,000 அஞ்சல் குறியீட்டு எண்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைக்கிறது. இவற்றில் 13 கிளைகள் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் அமைந்துள்ளன. இந்த எல்லைப் படப் பகுதிகளில் பணியாற்றும் பட்டைய கணக்காளர்கள் வெறும் அடையாளப்பூர்வ ஆதரவை மற்றும் தெரிவிப்பதில்லை மாறாக நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன்னார்வலர்களாக களம் இறங்கி தங்களது அறிவாற்றல் மற்றும் இதர வளங்களை உள்ளூர் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். ஐ.சி.ஏ.ஐ அமைப்பின் வலுவான உள்ளூர் தொடர்புகளின் வாயிலாக அதன் உறுப்பினர்களும் மாணவர் தன்னார்வலர்களும் அரசு முகமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண அமைப்புகள் ஆகியோருடன் இணைந்து, தேவைப்படுவோருக்கு தேவைப்பட்ட நேரத்தில் உடனடியாக உதவி செய்ய முடியும்.
ஐ.சி.ஏ.ஐ-யின் தன்னார்வலர்கள் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், பொது மக்களுக்கான தற்காலிக குடியிருப்பு முகாம்களை ஏற்படுத்திக் கொடுத்தால் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாடு செய்தல், சிலிண்டர்கள் மற்றும் முக்கியமான மருந்துகளை விநியோகித்தல் முதலிய நிவாரண பணிகளை செய்வதன் மூலமாக இன்றைய சூழலில் முக்கியப் பங்கினை வகிக்க இயலும்.
மேலும் அவர்கள் ரத்ததான முகாம்களை நடத்துவது மற்றும் இதர அவசரகால உதவிகளை செய்வது ஆகியவற்றை மேற்கொள்வர். அதேபோல ஐ.சி.ஏ.ஐ அமைப்பு, கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கும் படியும் ஏதேனும் சந்தேகத்துக்குரிய அல்லது தேசவிரோத நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக உரியவர்களுக்கு அதனை புகாராக எடுத்துச் செல்லவும் தற்போதைய நெருக்கடியான சூழலில் தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
ஐசிஏஐ அமைப்பின் தலைவரும் பட்டயக் கணக்காயருமான சரண்ஜோத் சிங் நந்தா, இந்திய ராணுவத்தின் பேராண்மை மிக்க நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டியதுடன் நாடு முழுவதிலுமுள்ள சி.ஏ தோழமைகளுக்கு, ‘இந்திய ராணுவத்துடன் இணைந்து நிற்போம்’ என்ற ஓர் அறைகூவலையும் விடுத்திருக்கிறார். நிதித் துறையின் 14 லட்சம் போர் வீரர்களும் வெறும் வார்த்தையால் மட்டுமல்ல, பொருள் பொதிந்த நடவடிக்கையாலும் நமது தேசத்துக்குத் துணை நிற்பர் என்று அவர் கூறியிருக்கிறார்.
பட்டயக் கணக்காயர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “ஐ சி ஏ ஐ அமைப்பு நமது வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வணங்குகிறது. பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதிகளைப் பழிதீர்த்த நமது வீரர்களை நினைக்கையில் பெருமிதம் பூக்கிறது. ’ஆபரேஷன் சிந்தூர்’ உண்மையில் நவ பாரதத்தின் வலிமையான செய்தியாகும். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற செய்திதான் அது. ‘தேசத்துக்கே முதலிடம்’ என்ற தனது கொள்கையில் எப்போதும் ஐ.சி.ஏ.ஐ உறுதியுடன் நிற்கிறது. நமது நாட்டை எந்த சூறாவளி அசைத்துப் பார்த்தாலும் தாய் நாட்டைத் தாங்கும் தூணாகவே ஐ.சி.ஏ.ஐ தொடர்ந்து நின்று வந்திருக்கிறது” என்றார்”.
மேலும் இது குறித்த அவர் பேசும் போது ஐ சி ஏ ஐ யின் உறுப்பினர்களும் மாணவர்களும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பாதுகாக்கும் பொருட்டு உயர் நெறிகளோடு திகழவும் வேண்டுகோள் விடுத்தார்.
“நெருக்கடியான தருணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம். நமது பட்டைய கணக்காயர் சமூகம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து நாம் வெறும் நிதித்துறைப் பணியாளர்கள் மட்டுமல்ல; மாறாக, நம் நாட்டின் வலிமை , கருணை மற்றும் எதிர்பாற்றல் ஆகியவற்றின் தூண்கள் தான்” என்றார் அவர்.
ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் துணைத்தலைவரும் பட்டயக் கணக்காயருமான டி.பிரசன்னகுமார் பேசுகையில் “நாம் இந்நாட்டின் பொருளாதாரப் படையின் வீரர்கள். இந்த தேசத்துக்கு தேவை ஏற்படும் ஒவ்வொரு மணிப்பொழுதும் நாம் என் நாட்டுக்கு சேவையாற்ற தயார்” என்றார்.
நாட்டில் எப்போதெல்லாம் நெருக்கடி நிலை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் நமது குடிமக்களுக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்த வரலாற்றைக் கொண்டது ஐ.சி.ஏ.ஐ அமைப்பு. 1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நிகழ்ந்த பொழுது வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐ.சி.ஏ.ஐ உறுப்பினர்கள் பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களாகவே வழங்கினர். கோவிட்-19 பெருந்தொற்றின்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பலவகைகளிலும் ஐ.சி.ஏ.ஐ, ஆதரவை நல்கியது. பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது முதல், கல்வி கட்டணத்தை ரத்து செய்து அவர்களின் கல்வி தொடர கை கொடுத்ததுவரை பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஐ.சி.ஏ.ஐ அமைப்பின் உறுப்பினர்கள் உணவு வழங்குதல் ரத்ததானம் மற்றும் ரத்த தட்டுகள் தானம், தடுப்பூசி முகாம் நடத்துதல் என்று பலவற்றையும் தங்களது உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் செய்து பங்காற்றினர் எமது உறுப்பினர்கள்.
எமது மண்டல கவுன்சில்கள், கிளைகள், வெளிநாட்டுக் கிளைகள், பயிலும் வட்டங்கள். கல்வி மையக் கிளைகள் ஆகியவற்றின் வாயிலாக ஐ.சி.ஏ.ஐயின் கோவிட் சிறப்புப் பணிக்குழு, அவசர கால உதவிகளை (ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்களை ஏற்பாடு செய்தல், மருத்துவமனை, படுக்கைகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை) செய்து கொடுத்தது. எமது பல கிளைகள், அவசர உதவி தேவைப்பட்ட காலத்தில் மருத்துவமனைகளுக்குத் தேவையான முக்கியமான பொருட்களை வழங்கி, உள்ளூர் சுகாதார வசதிகளை வலுவாக்கின.
எமது இந்தப் பங்களிப்புகள் வெறும் புள்ளி விவரங்கள் மட்டுமல்ல; மாறாக, இந்தியத் தாயின்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றுறுதிக்கான காலடித்தடங்கள் ஆகும். நாட்டைக் கட்டமைப்பதில் நம்பகமான கூட்டாளியான நாங்கள், தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் படைகள், மாண்புமிகு பிரதமர் அவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுடன் கைகோர்த்து நிற்கிறோம். நிதித்துறை வல்லுநர்களை, அவர்தம் தொழிலுக்கும் அப்பால், தேச பக்தியுடனும் தேசத்தின்மீதான வாஞ்சையுடனும் தங்குதடையற்ற தேசக்கடமையை ஆற்றுவதில் முனைப்பு காட்டுபவர்களாக உருவாக்க எமது அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.