Chennai City News

பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவில் நான்கு சூரன்ங்களின் சம்ஹாரம் நடந்தது

பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவில் நான்கு சூரன்ங்களின் சம்ஹாரம் நடந்தது

பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நவ., 4ல் காப்புக் கட்டுதல் விழா துவங்கியது. பழநி மலைக்கோயில் பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலை கோயிலில் வேல் வாங்குதல் நடைபெற்றது. அதன்பின் சன்னதி திருகாப்பிடப்படபட்டு, மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைந்தார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைந்தார்.

சூரஷம் ஹாரம் : நேற்று (நவ.,09) காலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து நான்கு சூரன்களும் கிரிவீதி கொண்டுவரப்பட்டது. கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் முருகனுக்கு தண்டு விரதம் முடித்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும், வடக்கே தாரகாசுரன், கிழக்கே பானுகோபன், தெற்கே சிங்கமுகாசுரன், வடக்கே சூரபத்மன் முத்துக்குமாரசுவாமியால் வதம் செய்யப்பட்டனர். இரவு 9:00 மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடைபெற்றது. மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடந்தது.

பாதுகாப்பு : சூரசம்ஹார நிகழ்வுக்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி தலைமையில் பணிபுரிந்தனர்.

திருக்கல்யாணம் : (நவ.,10) காலை 9.00மணிக்கு மேல் 10:30 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல் 12:30 பின் வழக்கம்போல் மலைக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6.30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

 

Exit mobile version