உயிர் தமிழுக்கு விமர்சனம் : ‘உயிர் தமிழுக்கு’ ஒரு காதல் அரசியல் நாடகம் | ரேட்டிங்: 3/5

0
473

உயிர் தமிழுக்கு விமர்சனம் : ‘உயிர் தமிழுக்கு’ ஒரு காதல் அரசியல் நாடகம் | ரேட்டிங்: 3/5

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’

அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்க, பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.ஒளிப்பதிவு-தேவராஜ், எடிட்டர்-அசோக். இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். பிஆர்ஒ ஜான்.

எம்.ஜி.ஆர் பாண்டியன் (அமீர்), தனது ஊரில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர் பாண்டியன், எம்.ஜி.ஆருக்கு பிறகு தன்னை முன்மாதிரியாகக் கொண்டு, நாடகக் கலையும், வசீகரத்தையும் பயன்படுத்தி மக்களை கவர்ந்தவர், மேலும் முக்கியமாக, பழக்கடை ராமச்சந்திரன் (ஆனந்தராஜ்) மகள் தமிழ்செல்வி (சாந்தினி ஸ்ரீதரன்) மீது அவர் கொண்ட மோகம், அரசியல் அரங்கில் நுழைவதற்கான அவரது முடிவு. எம்.ஜி.ஆர் பாண்டியன், காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர், முன்னாள் அமைச்சருமான பழக்கடை ராமச்சந்திரன் நடை பயிற்சியின் போது மர்ம நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அவரின் மகள் தமிழ்செல்வியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் பாண்டியன் தான் இந்த கொலையை செய்தது என குற்றம் சாட்டப்படுகிறார். எம்.ஜி.ஆர் பாண்டியன் தனது காதலியின் தந்தை பழக்கடை ராமச்சந்திரன் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். தன் அப்பாவைக் கொன்றது பாண்டியன் தான் என்று தமிழ்செல்வி உட்பட அனைவரும் நம்பத் தொடங்குகிறார்கள். அத்துடன் தமிழ் செல்வியும் எம்.ஜி.ஆர் பாண்டியனை வெறுப்பதுடன் அவரை பழிவாங்க நினைக்கிறார். எம்.ஜி.ஆர் பாண்டியன் தன் மீதான கொலை பழியை நீக்கி தான் நிரபராதி என்று எப்படி நிரூபித்தார்? அத்துடன் காதலி தமிழ்ச்செல்வியும் எம்ஜிஆர் பாண்டியனும் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் சிறிது நேரம் மட்டுமே தோன்றி உறுதியான நடிப்பை வெளிப்படுத்திய அமீர், உயிர் தமிழுக்கு படத்தில் காதலுக்காக அரசியல் களம் கண்டு, கதர் வேட்டி, சட்டையுடன், நக்கலும், நையாண்டியான பேச்சுடன், எம்.ஜி.ஆர் பாண்டியன் கதாபாத்திரத்தில் அமீரின் இன்ட்ரோ மாஸாக உள்ளது. அவருக்கு உண்டான ஸ்டைலில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்.
தமிழ்செல்வியாக சாந்தினி ஸ்ரீதரன், கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பழக்கடை ராமச்சந்திரனாக ஆனந்தராஜ் வழக்கம் போல் நகைச்சுவை கலந்த நடிப்பை வழங்கி நம்மை கவர்ந்துள்ளார். மேலும் இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவரும் அளவான நடிப்புடன் படத்திற்கு மதிப்பு சேர்க்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பா.விஜய் பாடல் அருமை.
ஒளிப்பதிவு – தேவராஜ் கேமரா கோணங்கள் சிறப்பு. படத்தொகுப்பு – அசோக் எடிட்டிங்கில் சற்று விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.
இது இந்தியாவில் அரசியல் சீசன் என்பதால், தமிழ் மொழிக்கான பெரிய அரசியல் நிகழ்வுகளுடன் ‘உயிர் தமிழுக்கு’ அமையும் என்ற தலைப்பை பார்த்தவுடன் நமக்குத் தோன்றுகிறது. மாறாக, அரசியல்வாதியின் மகள் தமிழ்ச்செல்வியின் மனதைக் கவர வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன், எம்.ஜி.ஆர். கொள்கைகளை தீவரமாக பின்பற்றி தற்செயலாக அரசியலுக்கு வரும் இளைஞனின் கதையை உள்ளூர் அரசியல் தனித்தன்மைகள் அரசியல் நையாண்டியை நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்து படைத்துள்ளார் இயக்குனர் ஆதம்பாவா.

மொத்தத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ ஒரு காதல் அரசியல் நாடகம்.