ரெபல் சினிமா விமர்சனம் : ரெபல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மரியாதைக்கான போராட்டம் | ரேட்டிங்: 3/5

0
470

ரெபல் சினிமா விமர்சனம் : ரெபல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மரியாதைக்கான போராட்டம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்
ஜீ.வி. பிரகாஷ் குமார் – கதிர்
மமிதாபைஜூ – சாரா
கருணாஸ் – உதயகுமார்
கல்லூரி வினோத் – பாண்டி
ஆதித்யா பாஸ்கர் – செல்வராஜ்
ஆண்டனி – பாரதி
வெங்கிடேஷ் வி.பி – ஆண்டனி
ஷாலுரஹீம் – சார்லி
சுப்பிரமணியன் சிவா – ராமலிங்கம்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குநர் – நிகேஷ்
ஒளிப்பதிவு – அருண் இராதாகிருஷ்ணன்
இசை – ஜீ.வி. பிரகாஷ் குமார்
படத்தொகுப்பு – வெற்றி கிருஷ்ணன்
இணை தயாரிப்பு – நேஹா ஞானவேல்ராஜா
தயாரிப்பு – கே.ஈ.ஞானவேல்ராஜா
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் எவ்வாறு மறுசீரமைக்கப்பட்டன என்பது பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் கதை தொடங்குகிறது.

80 ஆம் ஆண்டுகளின் போது கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காட்டில் உள்ள அரசு கல்லூரியில் அதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் எவ்வாறு சமத்துவம் கோருகிறார்கள் என்பதை கதைக்களமாக அமைந்துள்ளது. மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மகன்களான கதிர் (ஜீ.வி. பிரகாஷ் குமார்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட பலருக்கு பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அவர்கள் அந்தக் கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆவர். அங்கே, தமிழ் மாணவர்களான இவர்களுக்கு எஸ்.எப்.ஒய் மற்றும் கே.எஸ்.கியூ என்ற கேரளக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களால் ரேகிங், சாதிய, இனக் கொடுமைகள் செய்வதுடன் கீழ்த்தரமாக பார்க்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் அரசியல் லாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதே ‘ரெபல்’ படத்தின் மீதிக்கதை.

சென்சிடிவ் விஷயத்தை வைத்து உருவான கதை களத்தின் கனமான கதிர் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு தைரியம் வேண்டும். உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் ஜீ.வி. அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்.

மமிதாபைஜூ – சாரா, கருணாஸ் – உதயகுமார், கல்லூரி வினோத் – பாண்டி, ஆதித்யா பாஸ்கர் – செல்வராஜ், ஆண்டனி – பாரதி, வெங்கிடேஷ் வி.பி – ஆண்டனி, ஷாலு ரஹீம் – சார்லி, சுப்பிரமணியன் சிவா – ராமலிங்கம் உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பை தந்து சென்சிடிவான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில், கதையின் தேவைக்கு தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களின் கலவை மற்றும் பின்னணி இசையும் முக்கிய பங்கு வகித்து படத்துக்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில் வெகுஜன காட்சிகளை திறம்பட மேம்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன் கத்திரி இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

கலை இயக்குநர் பாப்பாநாடு சி.உதயகுமார் சிறப்பான பங்களிப்பு படத்திற்கான நம்பகத் தன்மையை காட்டுகிறது.

1980 களில் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவமாக இருந்தாலும், அந்த சென்சிடிவான விஷயத்தை வைத்து இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாகவும், தைரியமாகவும் இயக்கியுள்ள இயக்குனர் நிகேஷ் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, நேஹா ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்திருக்கும் ரெபல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மரியாதைக்கான போராட்டம்.