சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்ற கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘போராடி வா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ!

0
162

சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்ற கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘போராடி வா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ!

நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான போராடி வா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.