சாகர்- சமுத்திரக்கனியுடன் சாயாதேவி நடிக்கும் விஞ்ஞான படம் “கேக்காது”

0
300

சாகர்- சமுத்திரக்கனியுடன் சாயாதேவி நடிக்கும் விஞ்ஞான படம் “கேக்காது” ரோஜர் டேனி டைரக்ட் செய்கிறார்.

கன்னட பட உலகில் நாயகனாக வலம் வரும் சாகர் ” கேக்காது” படம் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக இயக்குனரும் நடிகருமான யார் கண்ணனின் மகள் சாயாதேவி நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் பங்கேற்கிறார். மேலும் இதில், பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், மூணார் ரமேஷ், வளவன் . ராமசந்திரன், வையாபுரி, மயில்சாமி, சிசர் மனோகர், வர்கீஸ் மாத்யூ, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

பி.ராஜசேகர் ஒளிப்பதிவையும், பிரகாஷ் நிக்கி இசையில் தாமரை, அமுதன் இருவரும் பாடல்களையும், பவர் பாண்டி சண்டைப் பயிற்சியையும், தினா நடனப் பயிற்சியையும், K.V.செந்தில் படத்தொகுப்பையும், தீபன் கலையையும் கவனிக்க லெட் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடட் சார்பில் டேனியல் தயாரிக்கிறார்.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ளது “கேக்காது”

படத்தின் கதையை பற்றி ” உலகமெங்கும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்து வரும் விஞ்ஞானம் வரும் காலத்தில் சிப் வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த உண்மையை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். அதனால் மனித உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அறிந்து நாயகன் அதிர்கிறான். அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள் படத்தின் உச்சகட்டம். இதில் விஞ்ஞானம், அரசியல், என பரபபரப்பாக இருக்கும் ” என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ” கேக்காது” படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ரோஜர் டேனி.

மக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா