வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி

0
42

வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ஐதராபாத்: தெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாநிலம்மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி கை அசைத்தார்.

ஆனால் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த இளைஞர், தலையை கீழே குனிந்தபடி சோதனை சாவடியை தடுப்பை கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

பலியான இளைஞர் சுதேனி வெங்கடேஷ் கவுட் என்று அடையாளம் காணப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் லக்செட்டிபேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்குமுகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.