ஏ.ஆர். ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஏ. ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது உயர்நீதி மன்றம் அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.