389.76 எல்எம்டி அளவு கோதுமையும், 504.91 எல்எம்டி அரிசியும் கொள்முதல் செய்து எஃப்சிஐ புதிய சாதனை
சென்னை, ஜூலை 31, 2020
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் முதல் கட்டம், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை வெற்றிகரமாக செயல்பட்டதால், இந்திய அரசாங்கம் இத்திட்டத்தினை மேலும் 5 மாதங்கள் அதாவது ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை நீட்டித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய NFSA மற்றும் AAY திட்டத்தின் கீழ் 81 கோடி பயனாளிகள் (தமிழ்நாட்டில் 1.11 கோடி பயனாளிகள்) இதன் மூலம் 5 கிலோ அரிசி / கோதுமை பெறுவார்கள். PMGKAY திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்காக நாடு முழுவதற்கும் இந்த 5 மாதங்களுக்கு (ஜூலை-நவம்பர் 2020) மொத்தம் 200.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன்கள் (8.54 LMT அரிசி மற்றும் 39307 MT கோதுமை) மற்றும் புதுச்சேரிக்கு 3171 MT அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டிற்கு மாநில அரசு மற்றும் பயனாளிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் 08.07.2020 அன்று தொடங்கி 28.07.2020 வரை ஜூலை 2020 மற்றும் ஆகஸ்ட் 2020 மாதங்களுக்கான தொகை 3.56 LMT-ல் 2.54 LMT (72சதம்) உணவு தானியங்கள் பயனாளிகளுக்கு கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
PMGKAY இரண்டாம் கட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களுக்காக ஒதுக்கப்பட்ட 200.19 LMT உணவு தானியங்களை சேர்த்து, இந்திய அரசு NFSA மற்றும் AAY திட்டத்தின் கீழ், ஐந்து மாதத்திற்கு மொத்தம் 445 LMT அளவிலான உணவு தானியங்களை பாதிக்கப்படக் கூடிய மக்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. NFSA மற்றும் AAY திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பயனாளிக்கும், தான் சாதாரணமாக மானிய விலையில் பெரும் உணவு தானியங்களையும் தாண்டி கூடுதலாக ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி (PMGKAY-II) அவரவர் குடும்ப அட்டையின் தகுதிகேற்ப முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்திய அரசு ஒதுக்கியுள்ள உணவுத் தானியங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டுசேர்ப்பதற்கு விரிவான மற்றும் விவரமான தளவாடங்கள் திட்டமிடலை இந்திய உணவுக்கழகம் மேற்கொண்டுள்ளது. இது, இந்திய உணவுக் கழகம் சாதாரணமாக கையாளும் அளவை விட இரு மடங்கு அதிகமானதால், தற்போதுள்ள சேமிப்புக் கிடங்கு கொள்ளளவு மற்றும் போக்குவரத்து வசதிகளை கொண்டு இந்தப் புதிய சூழலை கையாள்வது FCI-க்கு அதீத சவாலாக அமைந்தது. எனினும் இதனை எதிர்கொள்வதற்கு FCI தயாராக உள்ளது. ஆரம்ப கால பொது முடக்கத்தின் போது இருந்த இக்கட்டான காலத்தில் கூட, இதுவரை கண்டிராத அளவு உணவுத் தானியங்களை FCI கையாண்டு, தனது தளவாட செயல்பாட்டில் சாதனை படைத்தது. எந்தவொரு இந்திய குடிமகனும் பசி பட்டினியால் வாடக் கூடாது என்பதை நிலைநாட்டுவதற்காக உணவுத் தானியங்கள் எல்லா மூலை முடுக்கிற்கும் சென்று சேர வேண்டும் என்ற இந்திய அரசின் லட்சியத்தை நிறைவேற்றுகிறது.
மேலும் தற்போதைய கொள்முதல் பருவம் முடிவடைந்த நிலையில், தேசிய அளவில் மொத்தம் 389.76 LMT அளவு கோதுமையும் 504.91 LMT அரிசியும் கொள்முதல் செய்து FCI புதிய சாதனையைப் படைத்துள்ளது.