2019-2020-ஆம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

0
138

2019-2020-ஆம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

2019-2020-ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020-ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிவிட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ள வருமான வரித்துறை கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு ஜூலை 31-இல் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…Lockdown | ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

புதிய நீட்டிப்புக்கு முன்பாக செலுத்தப்படும் வரி முன்கூட்டியே செலுத்தப்படும் வரியாக கருதப்படும் என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.