தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

0
199

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக் கொருமுறை புதிய நிர்வாகி களுக்கான தேர்தல் நடக்கிறது 2020-2022 தேர்தலுக்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் நடக்கிறது. புதிய நிர்வாகி களுக்கான தேர்தலில் என்.ராம சாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப் பாளர்கள் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது. இந்த அணியினர் இன்று பேட்டி அளித்தனர்.

போட்டியிடும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் விவரம் வருமாறு:
தலைவர் பதவி:
என்.இராமசாமி (எ) தேனாண்டாள் முரளி
துணைத் தலைவர்கள்: (2 பதவி)
சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், ஆர்.கே.சுரேஷ்
கவுரவ செயலாளர்கள்: ( 2 பதவி)
ஆர்.ராதாகிருஷ்ணன்
கே.ஜே.ராஜேஷ்
பொருளாளர்:
எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்
செயற்குழு உறுபினர்கள்: (21 பேர்)
1) அழகன் தமிழ்மணி
2) ஆர். மாதேஷ்
3) கே.பாலு
4) ஆர்.வி.உதயகுமார்
5) என்.விஜயமுரளி
6) எஸ்.சவுந்திர பாண்டியன்
7) கே.ராஜ் சிற்பி
8) வி.பழனிவேல்
9) ஏ.எல்.உதயா
10) கி.எம்.டேவிட் ராஜ்
11) ராஜேஸ்வரி வேந்தன்
12) எம்.எஸ்.சரவணன்
13) எஸ்.தணிகைவேல்
14) டி.தங்கம் சேகர்
15) எஸ்.வி.ஜெயபிரகாஷ்
16) ஜி.மணிகண்டன்
17) ஜே.சுரேஷ்
18) ஜெ.சண்முகம்
19)எஸ்.ராமசந்திரன்
20)நீல்கிரீஸ் ஏ.முருகன்
21)முத்து

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டி யிடும் என்.இராமசாமி (எ) தேனாண்டாள் முரளி கூறியதாவது:
கொரோனா காலத்தில் சங்கத் தில் நடக்கும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் வாய்ந்தவர்கள் நிர்வாகிகள் பதவிக்கு எங்கள் அணியில் நிற்கின்றனர். தயாரிப்பாளர்கள் கொரோனா காலத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் நலன் காப்பதற்காக சுய நலமில்லாமல் எங்கள் அணி செயல்படும். தியேட்டர்கள் விபிஎஃப் கட்டணம் கட்டக் கூடாது என்பது எங்கள் அணியின் முடிவு. அதை தியேட்டர் அதிபர்கள். விநியோகஸ்தர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். நாங்கள் வெற்றி பெற்றால் சங்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்களுடன் மீண்டும் பேசி தாய் சங்கமான எங்கள் சங்கத்துடன் சேர்த்து ஒற்றுமையாக செயல்பட வைக்க பாடுபடுவேன். சங்கத்தை மீட்டெடுத்து அனைத்து தயாரிப்பாளர் களும் நல்வாழ்வு பெற எங்கள் அணி உழைக்கும் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு என்.இராமசாமி கூறினார்.

சிவசக்தி பாண்டியன் பேசும் பொழுது, ” என் ஆசான் இராம நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராய் இருந்த காலம் தான் தமிழ் திரை உலகின் பொற்காலம். மீண்டும் அந்த பொற்காலம் மலர்ந்திட இராம நாராயணன் அவர்களின் மகன் என் .இராமசாமியை தலைவராக தேர்ந்தெடுத்து செயலாற்றுவோம்” என்றார்.

ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ” இந்த அணியில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றால் தான் தயாரிப்பாளர்களின் தன்மானம் காப்பாற்றப்படும். மீண்டும் சங்கம் முடங்காமல் இருக்கவும், தயாரிப்பாளர்களின் நலம் காக்கவும் இந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக கே.ஜே.ஆர் என்று அழைக்கப்படும் கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் பேசுகையில், ” நாங்கள் வெற்றி பெற்று வந்ததும் வருடத்திற்கு பத்து தயாரிப்பாளர்களை படம் தயாரிக்க வைத்து அவர்களின் ஏற்றத்திற்கு உதவுவோம். வியாபார தளங்களில் உள்ளவழிகளை ĺதயாரிப்பாளர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களின் படங்களின் வியாபாரத்திற்கு உற்ற துணையாய் இருந்து செயல்படுவோம்

மேலும் ஆர்.கே.சுரேஷ், செயற் குழு உறுப்பினர்கள் வினர் சார்பில் அழகன் தமிழ் மணி பேசினார். முடிவில் விஜயமுரளி நன்றி கூறினார்.

கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி 3 பக்க தேர்தல் அறிக்கை வெளியிட்டது.