தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

0
767

தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்துவருகின்றன.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த பரிசோதனை காட்டான்குளத்தூரில் அமைந்த எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடக்கவுள்ளது.

இதற்காக உடல் தகுதியுடைய நபர்களை கண்டறிந்து தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது. இந்த பரிசோதனையில் பங்கேற்கவுள்ள நபர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்வார்கள்.

அதன் பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நபர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களின் உடல் தகுதி கண்டறியப்படும். இதய நோய் உள்ளிட்ட பிற ஆபத்தான நோய்கள் எதுவும் இல்லை என்பதை பரிசோதிக்கப்படும்.

பாலூட்டும் தாய்மார்கள் இந்த பரிசோதனையில் சேர்க்கப்படமாட்டார்கள். முதல் கட்ட பரிசோதனையில் வழியாக ஆரோக்கியமான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் தரப்படும்.

14 நாட்களுக்கு பின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். இவ்வாறு தடுப்பு மருந்து உட்கொள்ளும் நபர்கள் 194 நாட்கள் கவனமாக இருப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.மேலும் படிக்க…

இவ்வாறு பரிசோதனையில் பங்கேற்கும் நபர், சோதனை காலகட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காப்புடன் இருக்க வேண்டும். 194 நாட்களுக்கு பிறகு அவருடைய உடலில் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான ஆண்டிபாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்று பார்ப்பார்கள்.

அடுத்தடுத்த பரிசோதனைக் கட்டங்களில் முதியவர்கள், உடலில் நோய் பாதிப்பு இருப்பவர்கள் மற்றும் சிக்கல் அதிகம் கொண்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள்.