ஜெர்மனி உதவியுடன் இந்தியாவுக்கு அறிவியல் ஆய்வுக்கு விசைப்பொறி வசதி

0
87

ஜெர்மனி உதவியுடன் இந்தியாவுக்கு அறிவியல் ஆய்வுக்கு விசைப்பொறி வசதி

அடிப்படை அறிவியல் ஆய்வுக்குத் தேவையான மிகப்பெரிய விசைப்பொறி வசதி யானது ஜெர்மனியில் அக்டோபர் 2010ல் டார்ஸ்டட் என்ற இடத்தில் உள்ள ஆண்ட்டி புரோட்டான் மற்றும் ஐயனிகள் ஆராய்ச்சி மையத்தில் (எஃப்.ஏ.ஐ.ஆர் ஜி.எம்.பி.ஹெச்) நிறுவப்பட்டுள்ளது.

இதன் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது.

இது ஒரு சர்வதேச மையமாகும்.

பல்வேறு உயிரினங்களில் இருந்து அதிக அடர்த்தி கொண்ட ஆன்ட்டி புரோட்டான் மற்றும் அயனி கற்றைகளை இந்த மையம் பயன் படுத்தும். இது அணு, அணுக்கரு, துகள் மற்றும் பிளாஸ்மா இயற்பியல் ஆய்வுகளுக்குப் பயன்படும்.

இந்தியாவில் இந்தத் திட்டமானது அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் அணுசக்தி துறையால் கூட்டாக செயல் படுத்தப்படுகின்றது.

நாட்டில் அதிநவீன எஃப்.ஏ.ஐ.ஆர் விசைப்பொறி கருவிகளை நிறுவுவதில் இந்தியத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் இந்திய விஞ்ஞானிகள் நாடு முழுவதிலும் உள்ள பல தரப்பட்ட நிலையங்களில் 40 வேறு வேறு குழுக்களில் பணிபுரிகின்றனர்.

இத்தகைய உயர்நிலை ஆய்வுகளின் வேகத்தைத் தக்கவைக்கவும் அனைத்து தரப்பினருக்கும் சேவைகள் கிடைக்கச் செய்யவும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை வகுத்துள்ளது.

உடனடியான, நடுத்தரமான மற்றும் நீண்டகால குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. கீழ்வருவனவற்றை உள்ளடக்கியுள்ள தர்க்க வரைவுச் சட்டகத்தின் அங்கமாக இந்தக் குறிக்கோள்கள் உள்ளன: ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தரத்தையும் அளவையும் அதிகரித்தல்

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவுபடுத்துதல், செயலாற்றும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வெளிநாடுகளுக்குச் செல்வதில் இருந்து அறிவாளிகளை உள்நாட்டிலேயே தக்க வைத்து சமூக, தொழிலக அபிவிருத்தியை விரிவுபடுத்துவதற்கு ஆராய்ச்சியின் தரம் / விளைவு ஆகியவற்றை மேம்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பத்தில் பயிலவும் பணியாற்றவும் இளைஞர்களைக் கவர்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலம் விஞ்ஞான ஆராய்ச்சியில் உலக அளவில் முதல்நிலை வகிக்கும் ஐந்து நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதுதான் நோக்கமாகும்.

மேலும் அறிவியல் தொழில்நுட்பத் துறையானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தொழிலக கல்வி நிலைய கூட்டுறவைத் தீவிரப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

எரிசக்தி, தண்ணீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை, சைபர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தேசிய அளவிலான சவால்களை எதிர்கொண்டு தீர்வு காணவும் அறிவியல் தொழில்நுட்பத்துறை முயல வேண்டும்.

மிகச்சிறந்த சர்வதேச அறிவியல் தொழில்நுட்ப அறிவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக புதிய நடவடிக்கைகள் தூண்டி விடப்பட்டுள்ளன.

சர்வதேச போட்டியை வென்றெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலும் வளர்ச்சி குறைவாக உள்ள நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பத் திறனை கட்டமைக்கவும் கூட்டுறவு முறையில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் ஆய்வுக்கு விசைப்பொறி, ஆண்ட்டி புரோட்டான் மற்றும் ஐயனிகள் ஆராய்ச்சி மையம், ஜெர்மனி