ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

0
104

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என்பது இந்த ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்றும் மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.