வீட்டிலேயே சூதாட்ட கிளப் : சென்னையில் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..!

வீட்டிலேயே சூதாட்ட கிளப் : சென்னையில் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு போலீசார் அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.

தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.