விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் மீன் மார்க்கெட்: அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்

0
116

விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் மீன் மார்க்கெட்: அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்

விழுப்புரம், செப்.21–

விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் அனிச்சம்பாளையம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் நவீன மீன் மார்க்கெட் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மீன் மார்க்கெட் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ்குமரன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில்,

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட பாசறை தலைவர் அன்பரசு, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், வார்டு இணை செயலாளர் கவுதமன், நிர்வாகிகள் கலை, ராஜாராம், அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 3 புதிய குடிநீர் லாரிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். முன்னதாக விழுப்புரம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.