லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்

0
177

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வனிதா கூறியுள்ளார்.