ரூ.5000 ஆக இருந்தாலும் மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் : சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு

0
10

ரூ.5,000 ஆக இருந்தாலும் மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் : சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். தலைமறைவான இவரை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

இதனையடுத்து கைது செய்த மதனை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ஊடக ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் கூடி நின்று மதனை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.

மதனை போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து உள்ளே அழைத்து செல்லும் வரை ஊடக ஒளிப்பதிவாளர்கள் காட்சியை பதிவு செய்தனர். அப்போது திடீரென மதன், ஒளிப்பதிவாளர்களை பார்த்து, “நான் என்ன பிரைம் மினிஸ்டரா, என்ன வளைச்சு வளைச்சு எடுக்கிறீங்க” என கேட்டார். மதனை அழைத்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் “நீ அக்யூஸ்ட் வா” எனக் கூறியபடி உள்ளே கொண்டு சென்றனர்.

முதல் மாடியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆபாச பேச்சு வீடியோ குறித்தும், வீடியோவில் பேசக்கூடிய தோழிகள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக மத்திய குற்றபிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.4கோடி இருப்பு உள்ளது.தலா ரூ.45 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் மதனுக்கு சொந்தமாக உள்ளது.மதனின் வருமான விவரங்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்படும்

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.மதனிடம் ரூ.5000 கொடுத்து ஏமாந்திருந்தாலும் புகார் அளிக்கலாம்.மதன் ஆன்லைனில் அறிமுகமான பலரிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்றுள்ளார்.புகார் அளிக்கும் பட்சத்தில் மதனிடம் கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்

[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகாரளிக்கலாம்.

சைபர் கிரைம், யூடியூப் மதன், ஆன் லைன் மோசடி,