முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை

0
293

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விழுந்துள்ளார். தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அகற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.