மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

0
163

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நிகழாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம சபை கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.