பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு ரெடி… அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

0
97

பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு ரெடி… அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழுக் கரும்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும், அரசுக்கு 249 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/TNDIPRNEWS/status/1873002384215163092/photo/1