புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

0
127

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இதில் உள்ள மும்மொழி கொள்கை, எம்.பி.எல். பாடப்பிரிவு ரத்து போன்ற அம்சங்களுடன் வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிர்க்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக பன்மொழி கொள்கை ஊக்குவிக்கப்படும். மூன்று மொழி பார்முலாவில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும், எந்த மாநிலத்திற்கும் எந்த மொழியும் திணிக்கப்படாது போன்ற ஆதரவான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையின் போது, புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.