பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளிக்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

0
198
டி என் எம் எஸ் டி டி திட்டத்தின்கீழ் மால்வாயில் கோடைகால உழவுப்பணி நடைபெறுவதை திருச்சிராப்பள்ளி இணை இயக்குநர் ஆய்வு செய்கிறார்

பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளிக்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழான உபரிக் குடிநீர் மேலாண்மைத் துணைத் திட்டம், விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளிக்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பொதுமுடக்கம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கடினமான காலங்களிலும், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில், போதுமான அளவு, உணவு தானிய உற்பத்தி செய்து, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் வேளாண்துறை கணிசமான பங்களித்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் நீர்ப்பாசனத் திட்டம் (Pradhan Mantri Krishi Sinjayi Yojana – PMKSY). விவசாயிகளுக்குத் தங்கள் உற்பத்திக்குத் தேவையான அளவிற்கு நீர் வழங்க உதவி செய்வதற்காக, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நுண்நீர்ப்பாசனம் மூலமாக அதிகபட்சம் பயன்படும் வகையில் நீரைப் பயன்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

குறுவை எஸ் ஆர் ஐ ஆலம்பாடி – இணை இயக்குநர் ஆய்வு

பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், முதன்மைத் திட்டமாக உபரி நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக புள்ளம்பாடி வேளாண் உதவி இயக்குநர் திரு.மோகன் கூறினார். இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வட்டத்திற்கு 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 13.5 லட்சம் ரூபாய் செலவில் 55 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவது உட்பட, உபரி நீர் மேலாண்மை தொடர்பான 295 பணிகளும் இதில் மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது 25,000 ரூபாய் வழங்கப்படும். டீசல் பம்ப் அல்லது மின் மோட்டார் பம்ப் அமைப்பதற்காக 115 பயனாளிகளுக்கு, ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் ரூபாய் மானியத்துடன் மொத்தம் 17.25 லட்சம் ரூபாய் இந்த வட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 9 லட்சம் ரூபாய் செலவில், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் மானியத்துடன் கன்வேயன்ஸ் குழாய்கள் பதிப்பதற்காகவும், கான்கிரீட் /கொத்து வேலை கட்டடப் பணிகள் செய்வதற்காகவும், 50 சதவிகித மானியத்துடன் 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டத்திற்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீரையும் மழையையுமே சார்ந்திருக்கும் விவசாயிகள், இத்திட்டத்தை, தங்களுக்கு கிடைத்த பரிசாகவே எண்ணுகிறார்கள். PMKSY திட்டத்தின் கீழ் மிக முக்கியமான துணைத் திட்டமாகும் இது. இத்திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக புள்ளம்பாடி வட்ட விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக, இந்த வட்டத்திலுள்ள விவசாய அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு மும்மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன (295 விண்ணப்பங்களுக்குப் பதிலாக 701 விண்ணப்பங்கள்) என்றும், 90 சதவிகித விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர்கள் கூறினர். எண்பது சதவீத பணி ஆணைகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டன 12க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன. பொறியியல் வேளாண் துறைகளின் இணைந்த சரிபார்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளையும், ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் மால்வாய், மணிவேல் வயல்களில் தோண்டப்படுவதையும் புதன்கிழமையன்று திருச்சி வேளாண் இணை இயக்குனர் திருமதி எஸ்.சாந்தி ஆய்வு செய்தார். கான்கிரீட் கொத்து வேலை, கட்டுமானப் பணிகளை வேளாண் அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கூட்டு விவசாயம் 2019- 2020 பவர் வீடர்கள் (களைக்கொல்லிக் கருவிகள்) வாங்கப்பட்டன அவற்றின் பயன்பாடு ஆய்வு செய்யப்படுகிறது வி கூடலூர் FPG.

தரிசு நில மேம்பாடு தொடர் வளர்ச்சிக்கான தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மால்வாயில் 100 ஹெக்டேர் தொகுப்பையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். கோடை உழவுப்பணிகள், விவசாயிகளைப் பதிவு செய்யும் திட்டம் ஆகியவற்றையும், குழுவினர் ஆய்வு செய்தனர். பருப்பு வகைகளுக்கான தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும், வேளாண் அலுவலர்கள் பரிசீலித்தனர். சாரதாமங்கலத்தில் ரோட்டவேட்டர் விநியோகம் விவசாயிகளுக்குப் பசுமை உர விதைகளை விநியோகித்தது. விவசாய நவீனமயமாக்கும் தமிழ்நாடு நீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், நந்தியார் சப் பேசின் பகுதிகளில், விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்பட்டது. பருப்பு வகைகளுக்கான தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெளிப்பான்கள் வழங்கப்பட்டன. இணை இயக்குநர் திருமதி.சாந்தி தலைமையிலான குழுவில், உதவி இயக்குநர் திரு. மோகன், வேளாண் அலுவலர் திரு.வீரமணி, வேளாண் துணை அலுவலர் திரு.ஜெகநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

திருச்சிராப்பள்ளியில் நீர்ப்பாசனத்திற்கு காவிரி நதி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. ஆனால் இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளும், மழைநீரை நம்பியுள்ளனர். “ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அதிக அளவிலான பயிர்” என்ற குறிக்கோளுடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீரைத் திறமையான முறையில் பயன்படுத்த பி எம் கே எஸ் வை போன்ற மத்திய அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக விளைச்சலைப் பெறவும், தேசம் தன்னிறைவு அடைவதற்கும் உதவியாக இருக்கும் என்பது திண்ணம்.