படைப்பாற்றல் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் – கமலஹாசன்
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு செல்வகுமார் ஏற்பாட்டில் ஐநாவில் நடைபெறவுள்ள கல்வியில் புதுமை கருத்தரங்ம் குறித்த மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் உலகநாயகன் கமலஹாசன் பேச்சு.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்து சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ,அதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பன்னாட்டு கல்வியாளர்களும்.
இரண்டாம் ஆலோசனைக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் , நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்களுடனும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இணையவழி ஆலோசனை கூட்டம் இன்று 01.8.2020 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த திரு ஜான் தன்ராஜ் அவர்கள் இணைப்புரையாற்றினார்
இதில் மக்கள் நீதி மையத்தின் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இதில் கனடா நாட்டைச் சார்ந்த அரசு அயலக தமிழ் எம்பிக்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்மொழிந்தனர். குறிப்பாக..
நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டிப் பேசிய ஜான் அவர்கள் உலகத்தை ஏமாற்றும் ஒரே கருவி கல்விதான் என்றும் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பது குறித்து பேசினார் . கனடா நாட்டைச் சேர்ந்த நேயர் பேசும்பொழுது இனிவரும் காலங்களில் தகவல் தொடர்பு துறை மிக பெரிய முக்கியத்துவம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்,இணைய வழி கல்வி முறை புதிய தொழில்நுட்பங்கலால் புதிய பரிமாணங்களை எட்டும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேசும்பொழுது இணைய வழி கல்வி முறையில் இருக்கும் சவால்களை வென்று புதிய கல்வி முறைக்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் .இணையவழிக் கல்வி முறைக்கு புதிய பாதுகாப்புகள் தேவைப்படுகிறது. ஆராய்ச்சி மாணவர்கள் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்.
ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படும் .மருத்துவத்துறையில் அதிக ஆராய்ச்சி படிப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும். கானா நாட்டு அரசர் பேசும்பொழுது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் கல்வியில் புதிய தாக்கத்தைப் பற்றியும் கல்வியின் தேவைப்படும் புதிய மாற்றங்கள் பற்றியும் கல்வியின் புதுமையின் அவசியம் பற்றியும் பேசினார்.
மேலும் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது.
“கல்வி என்பது வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டுமல்ல , அறிவே பிரதானம் அதை வளர்ப்பதற்கு, அதை வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் புதிய மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவைப் பெற்ற ஆசிரியராக இருக்க வேண்டும். எனக்கு கிடைத்த ஆசான்கள் மிக திறமைசாலிகள் குறிப்பாக பாலச்சந்தர் மற்றும் அனந்த் போன்றவர்கள் .
நாங்கள் 20 வருடம் கஷ்டப்பட்டு பெற்ற கல்வியை என்று இரண்டே வருடங்களில் மாணவர்கள் பெற்றுவிடுகிறார்கள் . அந்த அளவிற்கு கல்வியில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பாக ஊடகம் துறை சார்ந்த கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு வகுப்பறை என்பது மாணவர்கள் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகம் கலந்துரையாட வேண்டும் அதுவே சிறந்த வழியாக இருக்கும்.
இந்த உலகத்தை மாற்றுவதற்கு புதிய படைப்பாற்றல் திறன் மிக்க மாணவர்களை நாம் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் சூரியனைப் போன்று பிரகாசிக்க தனக்குள் ஒரு நெருப்பை வரவைத்து அவர்கள் இலட்சியக் கனவுகளை அடைய ஏற்றார் போல் உழைக்க வேண்டும். இன்றைக்கு இணையவழிக் கல்வி முறை வேகமாக வளர்ந்து வந்தாலும் ,மாணவர்களுடைய தனித்திறன்களை வளர்ப்பதற்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆசிரியர்கள் மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடும் அனுபவத்தைத் எப்படி கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. மாணவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளலாம் ஆசிரியரிடமிருந்து நேரடி அனுபவத்தை பெற முடியுமா என்பது கேள்விக்குறி. மாணவர்கள் இருக்கும் இடத்திலிருந்து எந்த செயல்பாடுகளும் இல்லாமல் குறிப்பான எந்த பயிற்சிகள் ஏதும் இல்லாமல் பள்ளி இணையவழி கல்வி முறை இருக்கிறது. இதையெல்லாம் புதிய தொழில்நுட்பங்களால் மாற்ற வேண்டும் அத்தோடு நேரடி கல்வி முறையை விரைவில் வரும் என்று நாம் நம்புகிறோம் புதிய படைப்பாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்குவோம் என்று நம்புகிறோம் ,நாளை நமதே என்று சிறப்புரையாற்றினார்.”
இந்த கூடலில், மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டு மன்னர் .மதிப்புமிகு ராயல் ஹைனஸ் நானா நெட்போவா ப்ரா IV, பிரஸ்டீயா. கனடாவின் ஒன்ராறியோவின் மார்க்கத்தின் மேயர் மாண்புமிகு பிராங்க் ஸ்கார்பிட்டி. கனடாதோர்ன்ஹில் எம்.பி.பி மாண்புமிகு லோகன் கனபதி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பேராசிரியர் டாக்டர் ஜெரால்ட் எல். ஃபைன்ஸ்டீன் ,அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜக்ட் தலைவர்.மதிப்புமிகு ஜான் நானா யா ஒக்கியேரே. போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக ஊடகப் பிரிவைச் சார்ந்த திரு ஜான் தன்ராஜ் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்