தியேட்டர்களை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

0
137

தியேட்டர்களை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது.

வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. கொரோனா குறையாமல் உள்ள சூழலில் தியேட்டர்களை திறப்பது ஆபத்தானது எனக் கூறியுள்ள அமைச்சர், வேறு வழியின்றி OTT இல் படங்களை வெளியிடுவதை தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளார். OTT யில் வெளியிட வேண்டாம் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்தாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இழப்பு தான் ஏற்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.