திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
571

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.