தினமும் நாளிதழ் வாசியுங்கள்: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை

தினமும் நாளிதழ் வாசியுங்கள்: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை

குன்னுார்;”தினமும் நாளிதழ்கள் வாசிப்பது மொழி அறிவை வளர்த்து கொள்வது மட்டுமல்லாமல், போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும்,” என, ரயில்வே டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வரலாற்று துறை சார்பில், குடிமை பணியில் போட்டி தேர்வு கற்பித்தல் தொடர்பான இணைய வழி கருத்தரங்கு நடந்தது.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை இயக்குனர் மற்றும் ரயில்வே டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசுகையில்,”கல்லுாரி மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.

தினமும் நாளிதழ்கள் வாசிப்பது, அறிவு சார்ந்த புத்தகங்கள் படிப்பது மொழி அறிவை வளர்த்து கொள்வது மட்டுமல்லாமல், போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் படிப்பை முக்கிய பங்காக எடுத்து வாழ்வின் வெற்றிப்படிக்கு அடித்தளம் அமைக்க வேண்டும்,” என்றார்.