தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டித்தள்ளிய பாமக நிறுவனர் ராமதாஸ்..!

0
143

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டித்தள்ளிய பாமக நிறுவனர் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படும்.

1968ம் ஆண்டு சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து இந்தி நீக்கப்பட்டது. தமிழக மக்கள் 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளை களைய உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.