சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை, ஆகஸ்ட் 06, 2020:
துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த, காசிமணி கொளஞ்சி, முருகன் சந்திரன் என்ற இரண்டு பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, நான்கு பாலிதீன் கவர்களில் தங்கப் பசையை அடைத்து, பெல்ட் பகுதியில் அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள, 731 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.