சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யக்கூடாது: மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

0
134

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யக்கூடாது: மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : ‘இடஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு என்ற, தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:மருத்துவ கல்விமாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.எனவே, மத்திய அரசு, மூன்று மாதம் வரை காத்திருக்காமல், உடனே தமிழக அரசுடன் கலந்து பேசி, குழுவை அமைக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு தொடர்பான, அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு, அரசாணை பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு என்ற, தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.