சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

0
97

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின்னர் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார் முதலமைச்சர் பழனிசாமி. இதனையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

அதன்படி இந்தாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள்;-

* டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது.

* துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.

* முதல்வரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சவுமிய சுவாமிநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

* பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது 2 பேருக்கும், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது 7 பேருக்கும், கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களுக்கு 27 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

* சிறந்த தொண்டு நிறுவனம் – சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ காதுகேளாதோர் பள்ளி,
* சிறந்த சமூக பணியாளர் – திருச்சி சாந்தகுமார்,
* சிறந்த மருத்துவர் – சேலம் சியாமளா,
* சிறந்த நிறுவனம் – அதிக மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலா நிறுவனம்,
* சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி – சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

இந்த சிறப்பு விருதுகளை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.