கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவம் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

0
146

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவம் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து சித்த மருத்துவ முறை தமிழகத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்துகாந்த கசாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயுர்வேத சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது.

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படும். கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் ஆயுர்வேத மருந்துகளை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையங்களில் விலையில்லாமல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.