‘கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்கிறது’ நடிகர் விஷால்

0
92

‘கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்கிறது’ நடிகர் விஷால்

நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் மிகத் தீவிரமாக உள்ளது. இதுவரையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

“அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு ஒத்தாசையாக இருந்த எனக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. என்னோடு பயணித்த எனது மேனேஜருக்கும் அந்த அறிகுறிகள் இருந்தன.

நாங்கள் எல்லோரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டோம். தற்போது அபாய கட்டத்தை கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம். இதை பகிர்வதில் மகிழ்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.