கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலம்

0
133

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலம்

தேனி அருகே கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை எடுத்துச்செல்ல வாகனங்கள் இல்லாமல் தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற அவலம் நடந்துள்ளது.

கம்பம் அருகே கூடலூர் அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா உறுதியானது. ஆனால் அவரை வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தினர்.

இந்நிலையில் அவர் சனிக்கிழமை காலையில் உயிரிழந்தார். உடலை எடுத்துச் செல்ல நகராட்சிக்கு தகவல் அளித்தும் பல மணி நேரமாக அமரர் ஊர்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பாக எடுத்துச் செல்லாமல் உடல் அடக்கம் செய்ததால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.