குஷ்பு எதையோ எதிர்பார்க்கிறார் என நினைக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

0
232

குஷ்பு எதையோ எதிர்பார்க்கிறார் என நினைக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

புதிய கல்விக் கொள்கை இனிப்பு பூசப்பட்ட மருந்தாக உள்ளது. நாடு முழுக்க இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கல்விமுறைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். நாடாளுமன்றம் முடங்கி இருக்கும் சூழலில் யாரிடமும் விவாதிக்காமல் இந்த முடிவை அரசு எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் கொண்டது. ஆனால் அந்த கருத்து சுதந்திரம் கட்சி கொள்கைக்கு மாற்றுக் கருத்தாக இருந்தால் அரங்கத்திற்கு உள்ளே இருப்பது ரசிக்கத்தக்கது. அதைத்தாண்டி பொதுவெளியில் பேசுவது குஷ்பூவின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அவர் எதையோ எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

அவர் என்ன எதிர்பார்க்கிறார் என இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படுமா என்ற கேள்விக்கு, ”நான் இன்னமும் அதை முழுமையாக படிக்கவில்லை, கிராமத்தில் இருக்கிறேன்,நெட்வொர்க் சரியாக இல்லை. இதுகுறித்து முடிவு செய்து தெரிவிக்கிறேன்” என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.