காதலரை பிரிந்தேனா…? – பிரியா பவானி சங்கர்

0

காதலரை பிரிந்தேனா…? – பிரியா பவானி சங்கர்

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர், 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்து படித்த ராஜ் என்பவரை காதலிப்பதாக அறிவித்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவின் மூலம் காதல் முறிந்து விட்டதாக தகவல் பரவியது. அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

கிரிவலம் போனால் வேண்டியதை கடவுள் கொடுப்பார் என்று நம்பி திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்திலேயே எரிந்து கைதட்டி சிரித்தார். மனிதர்கள் குணங்களை நாம் பார்க்க மறுத்த கோணத்தை காலம் காட்டியது. வாழ்க்கை மாறிவிட்டது. கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. கேட்டதை தராமல் நல்லதை தந்துள்ளார் கடவுள். மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து காதலரை பிரியா பவானி சங்கர் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் போனில் இந்த செய்தியை பார்த்து பிரியா பவானி சங்கர் சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, என்னை பற்றிய வதந்திகளை படிக்கும்போது இப்படித்தான் என்று பதிவிட்டு காதலரை பிரிந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

View this post on Instagram

சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்😀 ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on