கபாலி இசை உரிமம் பெற கடுமையான போட்டி போட்டது திங்க் மியூசிக்

0

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத சாதனை செய்தது. டீசரை பார்த்தவர்கள் படத்தின் பாடல்கள் மற்றும் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், திங்க் மியூசிக் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் இசை உரிமத்தை வாங்கியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறும்போது, ‘கடுமையான போட்டிகளுக்கு நடுவே திங்க் மியூசிக் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இசை உரிமத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை எப்போது வெளியாகும் என்று விரைவில் அறிவிக்கிறேன்’ என்றார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.