இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மற்றும் அசுரன் புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பலி…. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அருண்ராஜா காமராஜ்

0
14

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மற்றும் அசுரன் புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பலி…. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அருண்ராஜா காமராஜ்

இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, கடந்த ஆண்டு பரவிய முதல் அலையைக் காட்டிலும் படுபாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனைவி உயிரிழந்த நிலையில், அவரை கடைசியாக பார்க்க முடியாமல் இருக்கும் அருண்ராஜாவின் நிலையை நினைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கின்றனர்.
இந்நிலையில், அருண் ராஜா காமாராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் நடிகர் நிதிஷ் வீராவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் நிதிஷ் வீரா, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 17) காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் வல்லரசு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்த நிதிஷ் வீராவை தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் அடையாளப்படுத்தியது. இதன் பின்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நல்ல நடிகர் என பெயரெடுத்தார்.

ரஜினியின் காலா, அசுரன், நேற்று இன்று, ராட்சசி போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார் நடிகர் நிதிஷ் வீரா.

நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிகர் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்தடுத்த திரைப்பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகி வருவது திரைத்துறையினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.