‘இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்’ – 8-வது ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றினார் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
சென்னை, இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். 8-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலு வலகத்தில், 8-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப் போது, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடி ஏற்றிவைத்தார்.
பின்னர், கமல்ஹாசன் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது-
நம் மொழியின் குரல்வளை யைப் பிடிக்க நினைப்பவர் கள் இது எப்பேற்பட்ட மொழி என்று உணர வேண் டும். யாராலும் தமிழை கீழே இறக்க முடியாது. என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என்று பலரும் கூறுவார்கள். நான் 20 ஆண் டுகளுக்கு முன்பே அரசிய லுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது வராமல் இருந்த தையே நான் தோல்வியாக நினைக்கிறேன். அப்படி நான வந்திருந்தால் நான்பேசுகின்ற வார்த்தையும்,இடமும் வேறு இட டமாக இருந்திருக்கும்.
எனக்கு ஏராளமான ரசிகர் கள் இருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் வேறு, வாக்காளர் கள் வேறு என்பதை என்னு டைய அனுபவத்தில் புரிந்து கொண்டேன். என்னுடைய படத்தின்போது எனது வீட் டின் முன்பு பல மடங்கு கூட் டத்தை பார்த்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
8-வது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் அனைவரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கும். இது தான் நாம் ஏறி வந்த படி கட்டுகள். சட்டசபைக்கு நாம் செல்வதற்கு கடுமையாக பாடுபட வேண்டும். அதற் கான தொடக்க நாளாக இது இருக்க வேண்டும். முதலில் இருந்து அனைத்தையும் மாற்றி அமைக்கவே வந்திருக் கிறோம். அடுத்த ஆண்டை நோக்கி இப்போதே பய ணத்தை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
இந்த நிகழ்வில் துணைத்த லைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர் அருணாச்சலம், மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.